Header Ads



மதரஸா ஆசிரியர் மகள், பைலட் மரியம் ஜுமானா..


பத்தாம் வகுப்பு படிக்கும் போது பைலட் ஆக வேண்டும் என்ற மரியம் ஜுமானாவின் கனவு கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளது.


மலப்புறம் மாவட்டத்தில்  புல்பற்ற கிராமத்தை சேர்ந்த உம்மர் ஃபைஸி - உமையா பானு தம்பதியர் மகள் மரியம் ஜுமைனா. 


வானில் பறக்கும் விமானங்களை பார்த்து தாமும் ஒருநாள் இதுபோல் விமானங்களை இயக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே தனக்குள் ஆசையை வளர்த்தவர்.


பத்தாம் வகுப்பு படிக்கும் போது தாயிடம் தனது எண்ணத்தை சொன்ன போது அவர் முதலில் அதை காரியமாக எடுக்கவில்லை.


புல்பற்ற கிராமத்தில் இப்போதும் பெண் பிள்ளைகள் வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கும் வழக்கம் கிடையாது என்பதால் தாய் உமையா மவுனமாக இருந்தார்.


பைலட் ஆக வேண்டும் எனும் நோக்கில்  மரியம் ஜுமானா தனது ஆசையை தந்தையிடம் சென்று கூறிய போதும், மலப்புறம் அருகில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றி வரும் தந்தையும் விமானி பயிற்சிபெற வெளியூருக்கு அனுப்ப வேண்டும் என்பதால் முதலில் மறுத்தாலும் மகள் தனது நிலையில் உறுதியாக இருந்ததால் பெற்றோர் +2விற்கு பிறகு பார்க்கலாம் என்று சமாதானம் செய்தனர்.


அடுத்த இரண்டு வருடமும் +1, +2 படிப்பு கூடவே அவளுள் விமானி ஆகப்போகும் எண்ணமும் வளர்ந்தது.


+2வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மரியம் ஜுமானா மீண்டும் பைலட் விஷயத்தை சொல்ல வேறு வழியின்றி பெற்றோர் அதற்கான முயற்சியில் இறங்கினர்.


டெல்லியில் Fly Ola Aviation Academy நிறுவனத்தில் அட்மிஷன் கிடைத்தது.


தந்தையின் குறைந்த வருவாயில் மகளை விமானி பயிற்சிபெற வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க இயலாத நிலையில் தனது நகைகள் முழுவதும் விற்பனை செய்து ஃபீஸ் கட்ட தாய் முன்வந்தார்.


ஒரு மதரஸா ஆசிரியராக மகளை வெளியூருக்கு அனுப்புவதை உறவினர்கள் விமர்சனம் செய்ததையும் பொருட்படுத்தாது உமர் ஃபைஸி மகளுக்கு ஆதரவாக இருந்தார்..


ஓராண்டு கடின உழைப்பும் விடா முயற்சியும் பெற்றோரின் ஒத்துழைப்பும் மரியம் ஜுமானா 19வயதில் Student Pilot லைசென்ஸ் பெற்றதோடு தொடர்ந்து ஏழுமணி நேரம் விமானத்தை இயக்கி சாதனை படைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார்..


அடுத்து தொடர் பயிற்சி மூலம் 200மணி நேரம் விமானத்தை இயக்கும்  கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கான அவரின் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்..

Colachel Azheem..

No comments

Powered by Blogger.