Header Ads



மருந்துகளில் விலையை குறைக்க புதிய திட்டம்


மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.


அதன்படி, ஒரு ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை அதிகபட்சமாக 1 ரூபாய் 65 சதங்களுக்கு விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


மருந்து விலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மாற்றுவதற்கான விதிமுறைகள் இயற்றப்படும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்படி, புதிய விதிமுறைகள் விதிக்கப்படுவதால், மருந்துகளின் விலைகள் துறைமுகத்திலேயே நிர்ணயிக்கப்பட வேண்டும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், நாட்டுக்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு மருந்துப் பொருளுக்கும் விலை கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, குறித்த விடயங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆராய்வதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விலைக் கட்டுப்பாட்டுக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.