போர் நிறுத்தத்தில் என்ன உள்ளது..?
காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய விவரங்களை அல் ஜசீரா அரபி வெளியிட்டுள்ளது.
முதல் கட்டத்தில்:
இஸ்ரேலிய இராணுவம் காசாவிற்குள் 700 மீட்டர் (2,297 அடி) தூரத்திற்கு திரும்பும்.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 பேர் உட்பட சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கவுள்ளது.
பாலஸ்தீனிய குழுக்கள் 33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும்.
காசாவில் காயமடைந்தவர்களை மருத்துவ சிகிச்சை பெற இஸ்ரேல் அனுமதிக்கும்.
முதல் கட்டம் தொடங்கி ஏழு நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் எகிப்துடனான ரஃபா கிராசிங்கை திறக்கும்.
பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படும் எகிப்துடனான காஸாவின் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கும்.
Post a Comment