Header Ads



தாயின் தொலைபேசியை வாங்கி அறைக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட துயரம்


ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவம் நேற்று (03) மாலை பதிவாகியுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.


ஹசலக்க, தொரபிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த மெத்மி சிதும் குமாரி என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் ஹசலக்கவில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்று வந்துள்ளார்.


அம்மாவிடம் கையடக்க தொலைபேசியை வாங்கிக்கொண்டு சிறுமி அறைக்குச் சென்றுள்ளார், சில நிமிடங்களில் அவரது அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அவளது அம்மா, அப்பா, அக்கா ஆகியோர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அவள் தூங்கிக் கொண்டிருந்த இரும்புக் கட்டிலைப் பிடித்துக் கொண்டு அலறிக் கொண்டு இருந்துள்ளார்.


பின்னர், சிறுமியின் தாத்தா படுக்கைக்கு அருகில் இருந்த மின் இணைப்பை துண்டித்துள்ளார்.


பின்னர் ஹசலக்க வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


எனினும், மஹியங்கனை வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.