ரொட்டிகளில் புழுக்கள் - அதிர்ச்சி சம்பவம்
திவுலப்பிட்டிய - கெஹெல் எல்ல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மூன்று ரொட்டிகளில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றிரவு(12) இந்த ரொட்டியை கொள்வனவு செய்ததாக கூறப்படுகிறது.
இதன்போது, ரொட்டிகளை சாப்பிடத் தயாராகும் வேளை அதில் புழுக்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உணவு கொள்வனவு செய்யப்பட்ட ஹோட்டலுக்கு சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நபர் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
Post a Comment