Header Ads



இலங்கையில் பிறந்த ரோஹிங்கிய குழந்தை


மியன்மாரில் இருந்து இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த ரோஹிங்கிய அகதிகளுள், கர்ப்பிணிதாய் ஒருவருக்கு நேற்றையதினம்(20) இரவு 11 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது.


முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது.


குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் தஞ்சம் கோரியிருந்தனர்.


அவர்களில் ஒரு கர்ப்பிணி தாயும் உள்ளடங்கியிருந்தார். குறித்த கர்ப்பிணித்தாய் நேற்றையதினம்(20) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் குழந்தையை பிரசவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.