இன்றும் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது, ஏவுகணைத் தாக்குதல் - அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
புதன் கிழமை (01) நள்ளிரவில் காசா பகுதியிலிருந்து ஏவுகணைகள் கடக்கும்போது இஸ்ரேணிண் சைரன்கள் ஒலித்தன.
எனினும் சேதங்கள் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமென, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
'ஹமாஸ் விரைவில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க அனுமதிக்கவில்லை என்றால், மற்றும் இஸ்ரேல் மீது துப்பாக்கிச் சூடு நிறுத்தப்படாவிட்டால், அது காசாவில் நீண்ட காலமாக காணப்படாத பலத்தால் தாக்கப்படும்' என்று காட்ஜ் குறிப்பிட்டுள்ளகார்.
இது இஸ்ரேலிய ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
Post a Comment