Header Ads



வெலிக்கடை சிறையில் ஞானசாரர் அடைப்பு - கூட இருப்பவர்கள் யார் தெரியுமா..?



சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 


அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 


‘கே’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பலர் இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இஸ்லாமிய மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.