Header Ads



ஈலோன் மஸ்க் வெளிப்படுத்தியுள்ள கவலை



இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது, மனிதகுலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.


இந்தியாவின் மக்கள் தொகையானது 2100ஆம் ஆண்டளவில் 110 கோடிக்கும் கீழ் குறையும் என்றும், சீனாவின் மக்கள் தொகை 73 கோடி அளவில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரம் ஒன்றைப் பகிர்ந்து மஸ்க் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


2023ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி ஆகவும், சீனாவின் மக்கள் தொகை 141.07 கோடியாகவும் உள்ளது.


அண்மையில் வெளியான ஐ.நா சபை, உலக வங்கி மற்றும் இந்திய சுகாதாரத்துறை ஆகியவற்றின் புள்ளிவிவரப்படி, இந்தியாவின் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி 0.92 சதவீதமாக உள்ளது.


எதிர்வரும் காலங்களில் இந்த வளர்ச்சி விகிதம் மேலும் குறையும் என்று அஞ்சப்படுகிறது.


குறிப்பாக இந்தியாவில் மக்கள் தொகை வளர்ச்சியில் பின்தங்கியுள்ள தமிழகத்தில் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.