Header Ads



நெதன்யாகு கண்டிப்பாகக் கூறியதை, அலட்சியம் செய்து கொண்டாடிய கஸ்ஸாம்


ராணுவ கைதிகளை விடுவிக்கும்போது எந்தவித கொண்டாட்டமும் இருக்கக்கூடாது என்று நெதன்யாகு கண்டிப்பாகக் கூறியிருந்தார். ஆனால், கஸ்ஸாம்  அதை அலட்சியம் செய்து கொண்டாட்டத்துடனே  விடுவித்தனர்.


 "தூஃபானுல் அக்ஸா" என்ற பதாகை வைக்கப்பட்டிருந்த மேடையில் அந்த நான்கு பெண்களும்  கம்பீரமாக நிற்பதைப் பார்த்தால், அவர்கள்தான் தூஃபானின்  செய்தித் தொடர்பாளர்கள் என்று எண்ணத் தோன்றும். செஞ்சிலுவைச் சங்க வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு, ஃபலஸ்தீன மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, அங்கு திரண்டிருந்த காஸா மக்களை நோக்கி புன்னகைத்து கையசைத்து, இரட்டை விரல் (வெற்றி) அடையாளத்தைக் காட்டி விடைபெற்றனர். 


அவர்கள் பிடிபட்டபோது அணிந்திருந்த ராணுவ சீருடை புதிதாகத் தேய்த்து மினுக்கப்பட்டது போலிருந்தது. அதைப் பார்த்தால், ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு வந்த கௌரவ விருந்தினர்களைப் போலத் தோன்றியது. அவர்கள் கைகளில் பரிசுப் பொட்டலங்களும் இருந்தன.


 இதுதான் காஸா. போராளிகளின் வீர சொர்க்கம், ஆணவமிக்க ஆக்கிரமிப்பு சக்திகளின் இறுதிக் கல்லறை. 

الله اكبر ولله الحمد

அல்லாஹ் மிகப் பெரியவன், எல்லாப் புகழும் அவனுக்கே.


Syed Ali 

DrCK Abdulla

No comments

Powered by Blogger.