அதானியுடன் ஒப்பந்தம் - இலங்கை நீதிமன்றத்தில் இன்று நிகழ்ந்த விசாரணையின் அப்டேட்
மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டம் தொடர்பில் செய்துகொண்ட ஒப்பந்தத்தை வலுவற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவு பிறப்பித்தது.
குறித்த மனுவை இலங்கை பசுமை அமைப்பின் தலைவர் சந்திம அபயவர்தன சமர்ப்பித்தார்.
இந்த மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம்.யூ.பி. கரலியத்தவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தத் திட்டம் தொடர்பான பல முக்கியமான வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை மே 23 ஆம் திகதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
Post a Comment