சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு, என்ன காரணம் தெரியுமா..?
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், கடந்த அரசாங்கத்தினால் ஒருவருக்கு தலா 20 கிலோ அரிசி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என, வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று தெரிவித்தார்.
சிவப்பு அரிசி சாப்பிடாத மக்களுக்கு கூட கடந்த அரசாங்கம் சிவப்பு அரிசியை வழங்கியதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"சந்தையில் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கடந்த அரசாங்கம் 20 கிலோ அரிசியை மக்களுக்கு விநியோகித்ததே தட்டுப்பாட்டுக்கு காரணம். சிவப்பு அரிசி சாப்பிடாத மக்களுக்கும் சிவப்பு அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. " என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
Post a Comment