கோட்டஹச்சிக்கு பிரச்சினை என்றால், மற்றவர்களை ஏன் வம்பு..?
”காதலர்கள் காதலிக்கட்டும்! மற்றவர்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? சமூக ஊடகங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த ஒரு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் விமர்சனங்கள் குறித்து பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது மகள் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கிறார் என்று சமூக ஊடகங்களில் ஒரு கதை கூட புனையப்பட்டதாக அவர் கூறினார்.
“அப்போது அரச ஊடகம் கூட அதனை செய்தியாக வெளியிட்டது.நானும் எனது மகளும் இந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.எனக்குத் தெரியாமல் கனடாவில் எனக்கு ஒரு மகள் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன்.கோட்டஹச்சிக்கு பிரச்சினை என்றால். மற்றவர்களை ஏன் வம்பு செய்கிறார்கள். அது அவளுடைய குடும்பத்தின் விஷயமா என்று கேட்டார்.
Post a Comment