ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
அம்பாந்தோட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,''மின்கட்டணத்தை குறைப்பதற்கான சாதகமான சூழலையே ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்தினார்.
ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதியும், அரசாங்கமும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை. அரிசி உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் முழுமையாக அடிபணிந்துள்ளது.
மின்கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதியளிக்கவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். பொய்யுரைப்பதையே இந்த அரசாங்கம் பிரதான கொள்கையாக கொண்டுள்ளது.
நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தார். நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.
சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது.
தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார்.
அதேபோல் 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்து நாட்டுக்காக சேவையாற்றிய அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது. பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.
அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ள வாக்குறுதிகள்! சிக்கல்களை அம்பலப்படுத்தும் ரணிலின் சகா | Reducing The Electricity Bill
ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு எதிரானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி இன்று அவரது கொள்ளைகளை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்து வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் என்ற நிலைக்கு சென்ற நாட்டை, இரண்டாண்டுக்குள் காப்பாற்றி வெளிநாட்டு கையிருப்பை 6000 பில்லியன் டொலர் வரை நிலைப்படுத்தினார்.
Post a Comment