Header Ads



மக்களின் எதிர்பார்ப்பில் வீழ்ச்சியா..? ஜனாதிபதியின் திட்டவட்டமான அறிவிப்பு


சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும்  சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர்  உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


சட்டத்தை அமுல்படுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.


நீதித்துறை கட்டமைப்பின்  மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும், அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும்  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு  மேலும் தெரிவித்தார். 


அவ்வாறு மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும்  வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும், சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.


நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார,  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

06.01.2025 


No comments

Powered by Blogger.