Header Ads



முன்பு காணாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது, நாம் அனைவரும் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்க நேரிடும்


 கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


இந்த நிலைமை இந்த நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.


"கடந்த 10 ஆண்டுகளில் கவனிக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.


2013 ஆம் ஆண்டில் 350,000 இருந்த பிறப்புகள், 2024 ஆம் ஆண்டில் 228,000 ஆகக் குறைந்துள்ளது. 


அந்தக் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.


20 வருடங்களுக்கு முன்பு நாம் காணாத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. குழந்தை பருவ நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


குழந்தைப் பருவப் புற்றுநோய் பற்றிய அறிக்கைகள் அதிகரித்துள்ளன. மனநோய் அதிகரிப்பதையும் நாம் காண்கிறோம்.


இது போன்று குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், எதிர்காலம் நன்றாக இருக்காது.


"நாம் அனைவரும் இதைப் பற்றி கவனமாக இல்லாவிட்டால், நாம் அனைவரும் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்க நேரிடும்" என்றார்.


No comments

Powered by Blogger.