இஸ்லாமிய ஸ்பெயின் வீழ்ந்த பிறகு, அங்குள்ள முஸ்லிம்கள் எதிர்நோக்கிய தண்டனைகள்
இந்தப் பெயர் கூட அவர்களை இழிவாக்கும் நோக்குடின் சூட்டப்பட்ட ஒரு வசை மொழிதான். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய முஸ்லிம்கள் என்பது இதன் அர்த்தமாகும்.
அங்கிருந்த வெளியேற மறுத்த இந்த மோரிஸ்கிய முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு உற்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் இரகசியமாக சன்மார்க்க சடங்குகளை கடைப்பிடித்து வந்தனர்.
அதற்குப் பிறகுதான் கொடூரமான கத்தோலிக்க சித்திரவதை முகாம்களை அமைத்து பல ஆண்டுகளாக இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வந்ததன.
ஸ்பென் சித்திரவதை முகாம்களிள் மோரிஸ்க்கிய முஸ்லிம்களிடம் பின்வரும் குற்றங்களில் ஒரு குற்றம் காணப்பட்டால் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படும்.
1- வெள்ளிக்கிழமையில் குளித்தது தெரிந்தால்.
2- இஸ்லாமிய பெரு நாட்களில் அலங்கார ஆடைகளை அணிந்திருந்தால்.
3- வீட்டில் குர்ஆன் பிரதிகள் கணப்பட்டால்.
4- ரமழானில் பகல் வேளையில் சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்தால்.
5- அளவுக்கதிகம் குளித்து சுத்தம் சுகாதாரமாக, வாசனை திரவியங்கள் பூசிவது கண்டால்.
எனினும் 1967 ஆம் ஆண்டு ஸ்பெயினில் மதச் சுதந்திர அனுமதிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது சுமார் 600 குடும்பங்கள் 5 நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் இரகசியமாக இஸ்லாம் மார்க்கத்தை கடைப்பிடித்து வந்ததாக அறிவித்ததன.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment