கனடா விபத்தில் இலங்கையரான தந்தையும், மகளும் உயிரிழப்பு
குறித்த விபத்தில், யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை பூர்வீகமாக கொண்டவரும் தற்போது கனடாவில் வசித்து வருபவருமான புஸ்பராஜா பகீரதன் (வயது 40) அவரது மகளான பகீரதன் றியானா (வயது 03) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவில், அதிவேக நெடுஞ்சாலையில் வாகனத்தில் தந்தையும் மகளும் பயணித்துக்கொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையடுத்து, காயமடைந்த தனது மகளை விபத்துக்கு உள்ளான வாகனத்தில் இருந்து மீட்டு, அதிவேக நெடுஞ்சாலையை கடக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது , மற்றுமொரு வாகனம் அவர்கள் மீது மோதியதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தந்தையும், மகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மூன்று வாகனங்கள் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கனேடிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment