ஸ்பானிஷ் மொழி உதவி பேராசிரியராக, மௌலவி பாயிஸ் அதனி
அடுத்த வருடமே மஅதின் அகாடமி நிறுவனர் சையத் இபுறாகீம் கலீலுல் புகாரி தங்கள் ஆலோசனையில் Ma'din Spanish Academy ஆரம்பிக்கப்பட்டு விரும்பும் மதரஸா மாணவர்களுக்கு ஸ்பானிஷ் மொழியில் டிப்ளமோ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கு ஸ்பானிஷ் மொழி படித்த மாணவர்கள் பலரும் ஸ்பெயின் நாட்டின் கல்வி அமைச்சக நேர்முகத்தேர்வில் கலந்து அங்குள்ள அரசு பள்ளிகளில் Conversation Assistant ஆக பணியாற்றி வருகின்றனர்.
அதுபோலவே முகமது ஃபாயிஸ் அவர்கள் இங்கு பட்டப்படிப்புடன் அதனி ஸனதும் கூடவே மஅதின் ஸ்பானிஷ் அகாடமி மூலம் Advance Diploma in Spanish தேர்ச்சி பெற்றவர்.
தொடர்ந்து ஹைதராபாத் EFLU ல் English and Foreign Language University ஸ்பானிஷ் மொழியில் முதுகலை பட்டமும் தேர்ச்சி பெற்றவருக்கு உடனேயே பெங்களூர் சிற்றி பல்கலைக்கழகத்தில் ஸ்பானிஷ் மொழித்துறை உதவி பேராசிரியர் பணியும் கிடைத்துள்ளது.
தமிழக அரபிக்கல்லூரிகள் தங்கள் சிலபஸுடன் ஏதாவது ஒரு உபரி மொழி பாடத்திலும் தேர்ச்சி பெறும் வாய்ப்பை ஏற்படுத்த முன்வரவேண்டும்.
Colachel Azheem
Post a Comment