அல்லாஹ்வின் தேர்ந்தெடுப்பு...
"கத்தாப் வீட்டு கழுதை மாறினாலும், கத்தாபின் மகன் உமர் மாற மாட்டான்" அவனது குணமும் மாறாது என்று அன்றைய கால மக்கத்து அரபுகள் அடிக்கடி சொல்வார்கள். ஏனென்றால் அவர் மக்களிடம் சிறிது கடுமையுடன் நடந்து கொள்பவர். ஆனால் அல்லாஹ் அவரைத்தான் இஸ்லாம் வேகமாக பரவ காரணமாக ஆக்கி கன்னியப்படுத்தினான். பூமியின் மூன்றில் இரண்டு பகுதியை ஆட்சி செய்த பேரரசர் உமர்(ரலி)அன்ஹு
இஸ்லாமை கொண்டு உமர் ரலி அன்ஹு அறிந்து கொள்ளுங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதை கொண்டுதான் நமது கண்ணியம்
இரண்டாம் கலீஃபாவான
உமர் (ரலி)அன்ஹு அவர்களின் ஆட்சியில் பொது ஆலோசனை குழு நபர்களில் இளைஞர்கள் முதியவர்கள் இரு தரப்பும் இருந்தார்கள் அதற்கு உமர்(ரலி) வைத்த அளவுகோல் அவர்கள் அல்குர்ஆனை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே ...(-புஹாரி ஹதீஸில் உள்ள சுருக்கம்)
உமர் ரலி அன்ஹு அவர்களின் வெற்றிக்கு இதுதான் மிக முக்கிய காரணம். அல்குர்ஆன் என்பது நம்மமையும் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து பரிபக்குவ படுத்தும் சர்வ வல்லமையுள்ள ஏக ரட்சகனான அல்லாஹ்வின் வார்த்தையாகும் அல்லாஹ்வின் பேச்சோடு தொடர்பற்ற மனிதர்களை நமது வாழ்க்கையில் ஒருபோதும் உற்ற நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள் !
குர்ஆனை ஏற்றுக்கொண்டு ஆனால் அதை தன் தாய் மொழியில் படித்து அறிந்து கொள்ளாத பயிலாத அதனை வாழ்க்கையில் கிஞ்சிற்றும் பின்பற்றி நடக்காத ஒரு சமூகத்தால் ஆணவமும் தற்பெருமையும் பொறாமையும் சகோதராதத்துவமிண்மையும் கொடுத்து உதவாமையும், குழப்பமும் மட்டுமே மிஞ்சும்.
ஏனெனில் அது ஏடு சுமக்கும் கழுதையை போல கதைதான் உங்கள் நண்பர்களிடம் என்றாவது குர்ஆணை உன் மொழியில் கடைசியாக எப்போது வாசித்தாய் எத்தனை வசனங்கள் வாசித்தாய் என்று கேட்டுப்பார்த்துள்ளீர்களா??
நண்பர்களின் லட்சணம் அப்போது தெரியும் மேலும் அவர் உன் நண்பனாக இருக்க வேண்டுமா என்பதும் அப்போது தெரியும் !
அல்லாஹ்வை நினைவு கூற எவர் உனக்கு உதவுவாரோ அவரைத் தவிர வேறு எவரையும் உனக்கு நண்பனாக ஆக்கிக் கொள்ளாதே!..
📖நூல் அபுதாவூத் :126
உங்கள் நண்பனின் மார்க்கத்தில் நீங்கள் இருக்குகிறீர்கள் என்பது நபிமொழி ! அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர👈
உங்களில் யார் பைத்தியக்காரர் என்பதை நீர் காண்பீர்! அவர்களும் கண்டுகொள்வார்கள். தனது பாதையிலிருந்து வழிதவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழியில் இருப்பவர்களையும் அவனே நன்கறிந்தவன். எனவே, பொய்யெனக் கூறுவோருக்குக் கட்டுப்படாதீர்! நீர் (கொள்கையில்) விட்டுக் கொடுத்தால் அவர்களும் விட்டுக் கொடுப்பதை விரும்புகின்றனர்.
📖அல்குர்ஆன் - 68 : 5, 6, 7, 8, 9
Post a Comment