Header Ads



சங்காவுககு உயர் பதவி


லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் செயலாளரும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தற்போதைய தலைவருமான ஜெய் ஷா குறித்த குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் சவுரவ் கங்குலி, ஆன்ட்ரூ ஸ்ட்ராவுஸ், ஹீதர் நைட் ஆகியோரும் உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.


மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, எதிர்வரும் ஜூன் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் குறித்த குழுவின் (WCAC) பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.