இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம் - ஈரான்
இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள நாங்கள் முழுவீச்சில் தயாராக உள்ளோம். இனியும் இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும் என ஈரான் தரப்பு வெளியிட்டுள்ள செய்தியானது மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த தாக்குதல் என்பது பிராந்திய அளவில் பெரிய போருக்கு அழைத்து செல்லலாம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும், கருத்து தெரிவித்த அவர்,
“இஸ்ரேல் தவறான நடவடிக்கை எதையும் செய்யாது என்று நம்புகிறேன். இனியும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்கினால் நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். பதிலடி கொடுப்போம்.
இந்த பதிலடி என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய போரை ஏற்படுத்தலாம்” என்றார்.
ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபரில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ஈரான் அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டிவரும் நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment