குருநாகலில் பிடிபட்ட பணம் தொடர்பில்...
குருநாகலில் வீடு ஒன்றில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட 280 மில்லியன் ரூபாய் பணத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ரன் மல்லி என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ள குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான "ஹரக் கட்டாவின்" நெருங்கிய நண்பர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைத்த வருமானம் என்று நம்பப்படும் இந்தப் பணம், மடகஸ்காரில் இரத்தினக் கற்களை வாங்குவதில் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கையில் பயன்படுத்தப்படவிருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய பணத்தொகை இதுவாகும்.
இந்தநிலையில் வெளிநாட்டில் மறைந்திருப்பதாகக் கூறப்படும் ரன் மல்லியைக் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Post a Comment