வாழ்வில் முன்னேற சில முன்னுதாரண சம்பவங்கள்
🔺️
👉🏼 நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்ட் நிறுவனத்தை கண்டுகொள்ளவில்லை.
👉🏼 யாகூ நிறுவனம் கூகுள் நிறுவனத்தைப் போல தன்னை மாற்றிக்கொள்ள மறுத்தது.
👉🏼 கோடாக் நிறுவனம் டிஜிட்டல் கேமராக்களை அவதானிக்கவில்லை
👉🏼 பிளாக்பஸ்டர் நிறுவனம் நெட்ஃபிக்ஸ் ஏற்கவில்லை.
பாடம் 👇
காலத்துக்கேற்ப நீ உன்னை மாற்றிக் கொள்ளாவிட்டால் இருந்த இடத்திலே இருக்க வேண்டி வரும், உன் கதை காலாவதியாகிவிடும்.
🔺️
👉🏼 ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை வாங்கிவிட்டது.
👉🏼 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் Uber ஐ கிராப் நிறுவனம் வாங்கிவிட்டது
பாடம் 👇
உங்கள் சக போட்டியாளர்கள் உங்களுக்குக் கீழால் இருக்கும் வகையில் நீங்கள் பலசாலிகளாக இருக்கப்nபாருங்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு புதுமைகளை புகுத்தப்பாருங்கள்.
🔺️
👉🏼 கர்னல் சாண்டர்ஸ் என்பவர் 65 வயதில்தான் KFC ஐ நிறுவினார்.
👉🏼 அதை வேளை KFC யில் வேலை கேட்டு கிடைக்காத ஜாக் மா, அலிபாபா நிறுவனத்தை நிறுவி, 55 வயதில் ஓய்வும் பெற்றார்.
பாடம் 👇
வயது என்பது ஒரு விஷயமல்ல. தொடர் முயற்சிகள் செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்.
🔺️
👉🏼 ஃபெராரி கார் நிறுவனரான என்ஸோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட சாதாரண டிராக்டர் உரிமையாளர்தான் பின்னர் லம்போர்கினி கார் நிறுவனத்தை நிறுவி வெற்றிகண்டார்.
பாடம் 👇
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment