காற்று மாசுபாடு குறித்து, இன்று வெளியாகியுள்ள தகவல்
நாடு முழுவதும் காற்றின் தரக் குறியீடு இன்று (30) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 150ஐ தாண்டியிருந்தாலும், நாட்டின் மத்தியில் பல இடங்களில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு தற்போது 50இற்கும் கீழே குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று (30) காற்றின் தரக்குறியீடு 150இற்கும் மேற்பட்ட அளவில் ஒரு இடம் கூட பதிவாகவில்லை என்றும், கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் தரக்குறியீடு 100இற்கு அருகில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமையும் மிக விரைவில் வழமைக்கு திரும்பும் என நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சுவாசப் பிரச்சினைகள் உள்ள உணர்திறன் மிக்க நபர்கள் ஏதேனும் அசௌகரியத்தை அனுபவித்தால் தகுந்த மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு மனித செயல்பாடுகளே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment