Header Ads



கண்ணீர் விட்ட மஹிந்த ராஜபக்ஷ


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் புலம்புவதாகவும் அனைவரும் கூறுகின்றனர். ஆனால் நாய்க்குட்டிகளைப் போல சிங்கங்கள் சிணுங்குவதில்லை என இத்தகண்டே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.


கெபித்திகொல்லேவயில் ஓடும் பேருந்து மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு பல சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கண்ணீர் விட்டதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அந்தத் துயரத் தருணமே இறுதியில் நந்திக்கடலுக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பரப்பில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முடிவிற்கு இட்டுச் சென்றது.


"மஹிந்த ராஜபக்ச தனது வசிப்பிடத்தை இழப்பதற்காகவோ அல்லது தனது பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டதாகவோ அழுபவர் அல்ல. அவர் ஒரு சிறந்த தலைவர். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை மதிப்பீடு செய்ய அனுப்பப்பட்ட நபர் சொத்துகள் முகாமைத்துவக் கிளையின் வெறும் எழுத்தராக மட்டுமே இருந்திருக்க வேண்டும்.


மஹிந்த, கொழும்பில் உள்ள விஜேராமவில் 4.6 மில்லியன் செலவழித்து வாழ வேண்டிய ஒருவர் அல்ல. தேவை ஏற்படின் அவர் கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்திருக்க முடியும்," என்று தேரர் கூறினார்.


"எனவே, தற்போதைய தலைவரின் படுக்கைக்கு அருகில் ஈரமான சாக்கு மூட்டையை வைத்து அவரை எழுப்பவும், அவர் இப்போது நாட்டின் ஜனாதிபதி என்பதை நினைவுபடுத்தவும் யாராவது அவருடன் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்று தேரர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.