Header Ads



மோட்டார் சைக்கிள் செலுத்தினரின், அதிக வேகம் உயிரைக் குடித்தது


யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் நேற்று (22) மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்றவேளையில் மோட்டர் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.  


விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான உதயநாதன் விதுசன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.  


இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,


யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற இளைஞன் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவத்தில் நடந்து சென்றவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கை, கால், முறிவடைந்த நிலையிலும், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இருவரும் வீதியால் சென்றவர்களினால் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


குறித்த சம்பவத்தில் அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த மாடுகளைக் கூட்டிச் சென்ற 32 வயதான இளைஞனும், தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நெல்லியடி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.


மோட்டார் சைக்கிள் செலுத்தினரின் அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

No comments

Powered by Blogger.