Header Ads



இரவு வேளையில் பாராளுமன்ற உறுப்பினரின் அதிடிரச் செயற்பாடு


யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில்  சுண்ணக் கற்களை  ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். 


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்திலிருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப்பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்குச் சொந்தமான பாரவூர்தி மூலமாக சட்டவிரோதமான முறையில் சுண்ணக் கற்கள் அகழ்ந்து செல்வதாகப் பிரதேச மக்களால்  நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.


அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது வியாழக்கிழமை (02) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி சுண்ணக் கற்களை  ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, குறித்த பாரவூர்தி மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.