Header Ads



உயிரை மாய்க்க முயன்ற யுவதி - சூட்சுமமாக செயற்பட்ட பொதுமகன் (படங்கள்)


கொழும்பு - களனி பாலத்தில் இருந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற யுவதியொருவர், பாதசாரி ஒருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.


குறித்த சம்பவம் இன்று (21) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இதன்போது அந்த பெண் பாலத்தின் சுவற்றில் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.


பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க தயாராக இருந்த சந்தர்ப்பத்தில், வழியில் சென்ற பாதசாரி ஒருவர் சூட்சுமமான முறையில் பின்னால் சென்று அவரை பிடித்துள்ளார்.


இதன்போது உடனடியாக விரைந்த, ஏனைய பாதசாரிகளும் முயன்று அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.





No comments

Powered by Blogger.