Header Ads



காஸா போர்நிறுத்தம் - எர்துகானிடமிருந்து வெளியாகியுள்ள வார்த்தைகள்


ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துடன் முடிவடைந்ததை நாங்கள் வரவேற்கிறோம் என துருக்கிய அதிபர் ரெசப் தையூப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.


அவர் இதுபற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


இந்த ஒப்பந்தம் நமது பிராந்தியத்திற்கும், அனைத்து மனிதகுலத்திற்கும், குறிப்பாக நமது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கு நன்மையை கொண்டுவரும் என்றும், நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான கதவுகளைத் திறக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.


இஸ்ரேலின் சட்டவிரோத மற்றும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து தங்கள் நிலத்தையும் சுதந்திரத்தையும் துணிச்சலுடன் பாதுகாத்த காசாவின் வீரமிக்க மக்களுக்கும் துணிச்சலான குழந்தைகளுக்கும் மரியாதையுடன் வணக்கம் .


துருக்கி என்ற வகையில், ஒடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் நமது பாலஸ்தீன சகோதரர்களை ஒரு கணம் கூட நாம் தனித்து விடவில்லை.


இனிமேல் காஸா மக்களுடன் நாங்கள் இருப்போம் என்று நம்புகிறோம், மேலும் காஸாவின் காயங்களை ஆற்றி மீண்டும் காலூன்றுவதற்கு எங்களின் அனைத்து வழிகளையும் திரட்டுவோம்.


இச்சந்தர்ப்பத்தில் காஸா நிலங்களுக்கு தங்களின் ஆசிர்வதிக்கப்பட்ட இரத்தத்தால் நீர் பாய்ச்சிய அனைத்து தியாகிகளையும் நினைவு கூர்வதுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கை வெற்றியடைய எனது இறைவனை பிரார்த்திக்கிறேன்.



No comments

Powered by Blogger.