புகைக்கும் ஆண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி, பெண்களின் விகிதம் அதிகரிப்பு
இலங்கையில் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் புகைப்பழக்க அதிகரிப்பு விகிதம் உயர்வாக இருப்பதாக வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கையில் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த புகைபிடிக்கும் ஆண்களின் எண்ணிக்கை, விகிதாசார அடிப்படியில் தற்போது குறைவடைந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், துரதிஷ்டவசமாக புகைப்பழக்கம் கொண்ட பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாக சமன் இத்தகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இளம் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக நுரையீரல் புற்றுநோய் காணப்படுகின்றது.
தற்போது, நுரையீரல் புற்றுநோய் பெண்களிடம் ஐந்தாவது பொதுவான புற்றுநோயாக மாறியிருப்பதாக இத்தகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 1.5 மில்லியன் இலங்கையர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்தது.
இவ்வாறானதொரு பின்னணி இருந்தும் இலங்கையில் புகைப்பழக்கம் பாரியளவில் குறைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அப்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment