மதீனா முனவ்வராவில் பிள்ளைகளுக்காக...!
குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்து உம்ரா புனித பயணம் வருபவர்களுக்கு வரப்பிரசாதமாக மஸ்ஜிதுன்னபவியின் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலை ஐந்து மணி முதல் இரவு பதினோருமணி வரை இந்த காப்பகம் செயல்படும்.
இங்கு உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் பணியில் இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள். உணவுகள் அனைத்தும் இங்கு உண்டு.
மஸ்ஜிதுன்னபவியிக்கு வருபவர்கள் இங்கு உங்கள் குழந்தைகளை விட்டு விட்டு நிம்மதியாக இபாதத்களை நிறைவேற்ற செல்லலாம்.
உங்கள் பிள்ளைகள் இங்கு இருக்கும் நேரங்களை பொருத்து கட்டணங்கள் பெறப்படும்.
Post a Comment