Header Ads



பாரிய மோசடி - முன்னாள் அமைச்சர் கொதிக்கிறார்


அரிசி இறக்குமதியில் பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,


அரிசி இறக்குமதியில் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது என முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


நாடு மற்றும் பச்சை அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருமளவில் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்தே இந்த மோசடி இடம்பெறுகின்றது என்பது குறித்து சந்தேகம் எழுவதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.