Header Ads



உயிரிழந்த மாணவனே பாடசாலையில் சித்தியடைந்த ஒரே மாணவன் - தாயின் கண்ணீர்


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வருவதற்கு முன்பே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த மாணவன், 159 புள்ளிகளைப் பெற்று, பரீட்சையில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


பலாங்கொடை, வலேபொட, வதுகாரகந்த பகுதியைச் சேர்ந்த சுபுன் சதருவன் என்ற மாணவனுக்கே இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.


உயிரிழந்த மாணவன் பலாங்கொடை வலேபொட தோர வெலகந்த பாடசாலையில் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றியுள்ளதுடன், பாடசாலையில் இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவனும் ஆவார்.


இந்த துரதிஷ்ட சம்பவம் தொடர்பில் மாணவனின் தாய் கண்ணீருடன் இவ்வாறு தெரிவித்துள்ளார், “எனது பிள்ளை இம்முறை புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றி, முடிவுக்காக காத்திருந்தான்.


புலமைபரிசில் பரீட்சையை எழுதிய பின்னர் நான் நூற்று அறுபது மதிப்பெண்களை பெறுவேன் என்று தெரிவித்திருந்தான்.


ஆனால் பரீட்சை முடிவுகள் வருவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவன் எங்களை விட்டு பிரிந்துவிட்டான்.  தற்போது பரீட்சை பெறுபேறுகளை பார்க்கும் போது 159 புள்ளிகளை பெற்றுள்ளான்.


இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் சித்தியடைந்த ஒரே குழந்தை என் மகன்தான், எனினும் இந்த பெறுபேரினால் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் பெறமுடியவில்லை.” என்றார்.  

No comments

Powered by Blogger.