தொப்புள் கொடியுடன் கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ள குழந்தை
யாழ்ப்பாணம் - கைதடி பகுதியில் தொப்புள் கொடியுடன் பிறந்த குழந்தையொன்று கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் உள்ள கிணற்றிலேயே குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சடலம் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குழந்தையின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
Post a Comment