பேராசிரியர் பட்டத்தை நீக்கிக் கொண்ட அமைச்சர்
நாடாளுமன்ற வலைத்தளத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேனவின் பெயரில் சேர்க்கப்பட்ட ‘பேராசிரியர்’ என்ற பட்ட தலைப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் நேற்று(21) இந்த மாற்றம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் கிருஷாந்த அபேசேன, ‘பேராசிரியர்’ என்ற பட்டத்தை வைத்திருந்தாலும், தற்போது பல்கலைக்கழக சேவையில் இல்லாததால் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தனது பெயரில் ‘பேராசிரியர்’ என்ற பட்டம் சேர்க்கப்படவில்லை என்று கூறிய அவர், தனது பல்வேறு ஆவணங்களிலும் அது இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
Post a Comment