Header Ads



நீர்கொழும்பு மாநகர சபைக்கு புதிய ஆணையாளர்


- இஸ்மதுல் றஹுமான் -


   நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக திருமதி நுவனி சுதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


    இவர் தனது கடமைகளை கடந்த 8ம் திகதி புதன்கிழமை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா நிர்வாக சேவை முதலாம் தர அதிகாரியான இவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் "உருமய" வேலைத்திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.


   கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த இவர் நீர்கொழும்பு பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகவும் பணி புரிந்துள்ளதுடன் பல அரச நிறுவனங்களிலும் சேவை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.