நீண்ட நாட்களின் பின் சந்திப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் (06.01.2025) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் பௌத்த மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் பனகல உபதிஸ்ஸ தேரரின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment