ஜுபைதா பின்த் ஜஃபர் அம்மையார் யாரென்றால்..
மக்கா முகர்ரமா புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தரும் லட்சக்கணக்கான ஹாஜிமார்களின் தாகத்தை தணிக்க தாயிஃப் நகருக்கு அருகே உள்ள "வாதி நுஃமான்" என்ற ஓடையில் இருந்து கால்வாய் திட்டத்தை செயல்படுத்தி அரஃபாத் வரை தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தவர் "ஜுபைதா பின்த் ஜஃபர்." .. என்ற அம்மையார்.
இவர் யாரென்றால் "கலிஃபா ஹாரூன் ரஷீத்" அவர்களின் துணைவியார்.
தற்போது நவீன திட்டங்களின் அடிப்படையில் அரஃபா. மினா. முஜ்தலிபாவுக்கு தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தாலும், எவ்வித வசதி வாய்ப்புகள் இல்லாத அந்த காலத்திலேயே 35 கிமீ தூரம் வாய்க்கால் அமைத்து ஹாஜிமார்கள் தாகம் தணிக்க தண்ணீர் ஏற்பாடு செய்தவர் "ஜுபைதா அம்மையார்."
இன்றளவும் இந்த வாய்க்காலை அரஃபாவில் நீங்கள் காணலாம்.
-முஜீபுர்ரஹ்மான் சிராஜி-
Post a Comment