விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென விழுந்து உயிரிழப்பு
பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் திடீரென தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் பெந்தோட்டையில் உள்ள காமினி கல்லூரியில் படித்து வந்த 7 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் நீண்ட காலமாக இதய கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment