நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்...!
அவர்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தன்னாலான விட்டுக்கொடுப்புக்களை செய்திருப்பார்கள். தனக்கு வர வேண்டிய உரிமைகள் மறந்து கணவன் உரிமைகளையும் குழந்தைகள் உரிமைகளையும் முதன்மைப் படுத்தியிருப்பார்கள. ஒரு ஆனந்தமான வாழ்வுக்காக ஏங்கியிருப்பார்கள்.
ஆனால் முடிவில் அவர்கள் விவகாரத்து செய்யப்பட்டிருப்பார்கள். அல்லது ஒடுக்கப்பட்டவாறே மரணித்திருப்பார்கள்.
பல கணவன்மார்கள் இருப்பார்கள். தங்கள் மனைவிக்காக, பிள்ளைகளுக்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்திருப்பார்கள். உழைத்து சேகரித்து அவர்களை வாழ வைத்திருப்பார்கள், படாத பல பாடுகள் பட்டிருப்பார்கள், அவர்களின் மகிழ்வுக்காக தங்கள் சுகங்களை மறந்திருப்பார்கள்.
ஆனாலும் வீட்டில் மனைவிமார்களால்
அவர்களுக்கு உரிய மரியாதையும் கவனிப்பும் வழங்கப்பட்டிருக்காது, பிள்ளைகளால் அவமதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களின் ஆண்மைக்கு
மதிப்பளிக்கப்ப்டடிருக்காது, கடைசியில் வீட்டில் ஒரு நாய் போல வாழ்ந்து மரணித்திருப்பார்கள்.
இது நாம் வாழும் உலகில் நடக்கும் நிதர்சனமான நிகழ்வுகள்தான். தாகம் வந்தால் குடிக்க தண்ணீர் இருப்பது போல, பசி வந்தால் உண்ண சோறு இருப்பது
அநியாயம் நடக்கும் ஒரு நாள் இருந்தால் நியாயம் கிடைக்கும் ஒரு நாள் இருக்கத்தான் வேண்டும். அதுதான் ஆண்டவன் தீர்ப்பு வழங்கும் தீர்ப்பு நாளாகும். ஆண்டவன் நீதி வழங்கும் நீதி மன்றமாகும்.
சண்டைக்காரர்கள் அங்கே நிறுத்தப்படுவார்கள், இலஞ்சம் கொடுக்க எதுவும் இருக்காது, எடுக்க ஆளும் இருக்காது, தரகர்கள் இருக்க மாட்டார்கள். சாட்சிக்காரர்களும் தேவையில்லை, காசு பணத்தால் டீல் இருக்காது, நன்மைக்கு நன்மை, தீமைக்கு தீமை என்றே தீர்ப்புக்கள் வழங்கப்படும்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!
அநியாயங்கள் அந்நாளில் அந்தகாரமாகவே இருக்கும்.
Imran Farook ✍ தமிழாக்கம்
Post a Comment