கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் வரலாற்றுச் சாதனை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (27) 126.81 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதன்படி, நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையாக 17,044.67 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 25.25 புள்ளிகள் அதிகரித்து 5,145.37 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5.93 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
Post a Comment