ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோசமான காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பாக அந்நாட்டு ஐஎஃப்ஐசி வங்கி(Bangladesh's IFIC Bank) தொடர்ந்த வழக்கை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் கொடுத்த காசோலைகளின் மதிப்பு 4,14,57,000 வங்காளதேச டாக்கா (சுமார் 100 மில்லியன் இலங்கை ரூபாய்) என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷகிப் அல் ஹசன் ஒரு கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது தப்பியோடி இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா கட்சியின் எம் பியும் ஆவார்.
ஷகிப் அல் ஹசன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment