Header Ads



யோஷித கைதானது ஏன்..? பொலிஸ் பேச்சாளர் கூறும் காரணம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.


2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை யோஷித ராஜபக்ஷ செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அதன்படி, யோஷித ராஜபக்ஷ தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணியின் உரிமை குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த 3ஆம் திகதி யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.