காட்டுக்குள்ளிருந்து இளம் தம்பதியின் சடலங்கள்
உயிரிழந்த தம்பதி கடன் சுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் நஞ்சருத்தி உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இராணுவ மேஜரான 38 வயதான சமரசிங்க பத்திரனகே ஜனக சதுரங்க அவரது மனைவியான தேஷானி அனுராதிகா என்ற 32 வயதான ஆசிரியையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் 4 வயது பிள்ளை ஒன்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கன்கானியமுல்ல காட்டிற்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ளதாக பன்னால பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் தினுக பிரியஞ்சித்துக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
அதற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, அந்த இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தின் அருகே தம்பதியினர் இறந்து கிடந்ததும், அருகில் ஒரு நஞ்சு மருந்து மற்றும் நெக்டோ போத்தல் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த நபரின் சட்டைப் பையில் ஒரு கையடக்க தொலைபேசி இருப்பதையும், அந்த தொலைபேசிக்கு ஒரே இலத்தில் இருந்து 119 முறை அழைப்புகள் வந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அந்த எண்ணை அழைத்தபோது, இறந்த தம்பதியினர் திருமணமான தம்பதிகள் என்பது தெரியவந்தது.
உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் மனைவியின் தந்தைக்கு எழுதிய கடிதமும் கண்டெடுக்கப்பட்டது, அதில் சொத்து தகராறு காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“எங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம்... ஆனால் நாங்கள் தோல்வியடைந்தோம்... எங்கள் சகோதரிகள் என்ன சொல்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்...” என்று அந்த கடிததத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் கடுமையான கடன் சுமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர், மேலும் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டி மருத்துவமனைக்கு சடலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Post a Comment