காசாவில் நிகழப்போகும் மாற்றங்கள் - அபு உபைதா கூறியதுதான் இப்போது நடந்துள்ளது, யாருக்கு தோல்வி..?
- Abdur Rahmanb-
அபு உபைதா முன்பு தெள்ளத் தெளிவாக கூறியதுதான் இப்போது நடந்துள்ளது: "நெதன்யாகுவும், கேலன்ட்டும் வெள்ளை மாளிகையில் உள்ள சியோனிஸ்டுகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் சொல்லும் உடன்படிக்கைகளுக்கு உடன்படாதவரை, கைதிகள் யாரையும் உயிருடன் திரும்பக் கொண்டு போய் விடலாம் என்று எண்ணி விடாதீர்கள்" . ஆம். இப்போது ஹமாசால் விடுவிக்கப்படும் 33 கைதிகளுக்கு பகரமாக இஸ்ரேல் 2000 சிறைவாசிகளை விடுதலை செய்ய உள்ளது.
ஹமாசால் முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு இஸ்ரேல் தள்ளப்பட்டுள்ளது. நினைவு கொள்ளுங்கள். தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நிலை இருந்தால் ஒருபோதும் இசுரேல் பின்வாங்காது.
15 மாதங்கள் நடந்த கொடூரமான மனித படுகொலைகளுக்குப் பிறகும் இஸ்ரேல் தனது இலக்குகளை அடைய முடியாமல் பின்வாங்குகிறது. கொல்லப்பட்ட மக்கள் மற்றும் அழிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுகள் இருந்தபோதிலும் உலகின் முன்னால் தோற்றது இஸ்ரேல்தான்.
அதி நவீன உயர் ஆயுத பலமும் ஆள்பலமும் பண பலமும் வல்லரசு நாடுகளின் இராணுவ, பொருளாதார ஆதரவும் இருந்த போதிலும், பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பையும், உறுதியையும் இஸ்ரேலால் பலவீனப்படுத்த முடியவில்லை.
உலகின் முதன்மையான உளவுத்துறையாக போற்றப்படும் மொசாதும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றமும் அறிவியல் ஆற்றலும் இருந்த போதிலும் அக்டோபர் 7 அன்று ஹமாசால் கைது செய்யப்பட்ட பணையக் கைதிகளை இன்றளவும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மாபெரும் இழுக்கு.
இஸ்ரேலுக்கு இனி அதன் முந்தைய மகிமை இருக்காது.
அவர்களின் பலவீனம் வெளிப்பட்டு விட்டது. இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் அவமானப்பட்டு நிற்கிறது.
மருத்துவமனைகளின் மீது கூட குண்டு வீசிய, உணவுக்காகக் காத்திருந்தவர்களை கொன்றொழித்த இஸ்ரேலுக்கு இனி ரத்தத்தின் நிறமும் மணமும்தான் மிச்சம் இருக்கும். காஸாவில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல, புதிய இன்திஃபாதாவின் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இனிமேல் இஸ்ரேலில் எதுவும் முன்பு போல இருக்காது.
வாக்களிக்கப்பட்ட பூமியை கனவு கண்டு இனி யூதர்கள் யாரும் அங்கு குடியேற மாட்டார்கள். புலம் பெயர்ந்த பாலஸ்தீனர்கள் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இது இஸ்ரேல் என்ற நாட்டின் முடிவின் ஆரம்பம்.
இஸ்ரேலால் வீசப்பட்ட ஆயுதங்களின், அழிக்கப்பட்ட தூசி படிந்த கட்டிடங்களின் எச்சங்களின் மீது பாலஸ்தீனக் கொடி இப்போது உயரப் பறக்கும். அவர்கள் இன்னும் அந்த மண்ணில் வாழ்வார்கள்.
குத்ஸுக்காக உயிரையும் குருதியையும் கொடுத்து போராட ஒரு புதிய தலைமுறை அங்கே காத்திருக்கிறது. அவர்களின் வழிகாட்டிகளாக, ஒளியாக பல்லாயிரக்கணக்கான ஷுஹதாக்கள் வானில் நட்சத்திரங்களாக பிரகாசிப்பார்கள். அதில் இரண்டு நட்சத்திரங்கள் பெரும் வெளிச்சம் வீசிக்கொண்டிருக்கும். ஷஹீத் இஸ்மாயில் ஹனியாவும் ஷஹீத் யஹ்யா சின்வாரும்.
பாலஸ்தீனத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொல்வதற்கு புதியதொரு வீரக் கதை உருவாகிவிட்டது. உலகம் அதன் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். 'துஃபானுல் அக்ஸா'.
இங்கே தங்களை செக்யுலரிஸ்டுகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சில இஸ்லாமிய வெறுப்பு சிந்தனை கொண்டவர்கள் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனைக்கு மைய காரணம் ஹமாஸ்தான் என்று கட்டமைக்க முனைகிறார்கள்.
உலகெங்கும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக குரல் எழுகின்ற போதும் இங்கே அந்த இஸ்லாமிய வெறுப்பாளர்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக பேசுவதற்கு பதில் அவர்களது தாக்குதலை நியாயப்படுத்தவும் சிலாகிக்கவும் முயல்கிறார்கள்.
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலிய பெண்களை கைது செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக நேரில் பார்த்தது போல் பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உங்கள் பொய்களும் புனைவுகளும் எந்த அடிப்படைகளும் அற்றவை. அவைகளின் ஆயுளும் குறைவு. எதிர்பார்த்திருங்கள். விடுவிக்கப்படும் கைதிகள் ஹமாசின் புகழ்பாடுவதை.
Post a Comment