Header Ads



அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த மஹிந்த


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முழுமையான பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் தனது பாதுகாப்பை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 


இந்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சரவை மற்றும் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல தசாப்தங்களாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனது தலைமைத்துவத்தினால் தொடர்ந்தும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.