முஸ்லிம்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் தமிழன் என்ற, வரலாற்றை நான் ஒருநாள் எழுதித்தான் செல்வேன்
மதம் மொழி தாண்டியது தான் அரசியல்
ஆயிரம் முகப்புத்தக கீழ்நிலை பதிவுகள் சகோதர இனம் சார்ந்த ஒரு சிலரால் பதியப்பட்டாலும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளே என்பதை மறுபடியும் வரலாறு எழுதிச்செல்லட்டும்.
என் கைகளில் இந்த அழைப்பிதழ் இன்று பாராளுமன்றத்தில் தரப்பட்ட போது மதம் மொழி தாண்டி அரசியலின் அன்பின் ஈர்ப்புகளை இன்று நான் உணர்ந்து கொண்டேன்.
அல்லாவின் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ஒவ்வொரு தூய முஸ்லிம் சகோதரனும் ஒரு தமிழ் சகோதரனை ஒருபோதும் வெறுக்க மாட்டான்.
ஒரு சிலரின் முகப்புத்தக பதிவுகள் நிதானமாக கடந்த வண்ணம் முஸ்லிம் தமிழ் சமூகம் ஒன்றாக வாழும் வரலாற்றை நாங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களால் அன்பாக ஆதரிக்கப்படும் ஒரு தமிழ் அரசியல்வாதியாக, ஒரு இந்து அரசியல்வாதியாக வரலாற்றை எழுதிவிட்டு செல்வதுதான் உண்மையான ஒரு அரசியல்.
மதம் மொழி கடந்து அன்பில் தவழ்ந்தது தான் மானுடம்.
அதை மீண்டும் மக்கள் உணர்ந்து கொள்ளும் காலம் வெகுவிரைவில் வரும்.
முஸ்லிம் மக்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் தமிழன் என்ற வரலாற்றையும் நான் ஒரு நாள் எழுதித்தான் செல்வேன்.
காலம் பதில் சொல்லிக்கிடக்கும். அதுவரை காத்திருங்கள்.
Post a Comment