ஜம்இய்யத்துல் உலமா - அமைச்சர் விஜித கலந்துரையாடல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்குமிடையிலான சந்திப்பொன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் சபையின் செயற்பாடுகள் குறித்த அறிமுகத்தை வழங்கியதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவது குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மேலும், இலங்கை முஸ்லிம்களின் சமய, பண்பாட்டு மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும், ஜம்இய்யா இதுவரை தேசிய அளவில் மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தனது அதிகாரத்தின் கீழ் இன, மத வேறுபாடுகளை கடந்து முக்கிய சில விடயங்களை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.
சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் மேலும் சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli
Post a Comment