Header Ads



கொழும்பில் முடங்கியுள்ள 8,000 மெட்ரிக் தொன் அரிசி



அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.


நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.


இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்குகிறது.


அதேபோல், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.


குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதி காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளது.


உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சரிசி பற்றாக்குறை ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.